கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக கலாநிதிகள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷாம் டீபண்ணஹெக்க தெரிவித்துள்ளார்.