உயர்தர பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரயோகப் பரிசீலனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 43 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்களின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் கெவிது குமாரதுங்க ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் உரையாற்றினார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தோற்றவுள்ள அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரை உரிய சம்பளங்கள் வழங்கப்படும். எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் உரிய கொடுப்பனவை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வக்கும்புர குறிப்பிட்டுள்ளார். இது தவிர, எல்லைக் குழு அறிக்கையை ஆராய மீளாய்ய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜகத்குமார மற்றும் எஸ்.எம். மரிக்கார் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.