உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம் என தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் இன்று தமது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியில் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற தலைவர்களை தெரிவு செய்ய இந்த தேர்தல்கள்உரிய. காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது.
கடந்த ஆட்சியில் அவை இழுத்தடிப்பு செய்யப்பட்டதால் மக்களுக்கு உரிய நன்மைகள் கிடைக்கப் பெறவில்லை. புதியதலைவர்களை தெரிவு செய்யும் உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வருடம் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள்வரவேற்கின்றோம். மக்கள் தங்களை ஆளக்கூடிய உள்ளூராட்சி தலைவர்களை தெரிவு செய்ய இந்த தேர்தல். நடாத்தப்படவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
AR