உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெற்று நான்கு வருட பூர்த்தியை இட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை நடைபெறவுள்ளது. தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து காலை 8.45க்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் முற்பகல் பத்து மணிக்கு ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புகு;கொடுக்கப்படும். இதேவேளை, காலை 8.30க்கு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் வரை கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் இரு மருங்கிலும் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமு;.