Home » உரிய ஆய்வின் பின்னர் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

உரிய ஆய்வின் பின்னர் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Source
Share Button

உரிய ஆய்வின் பின்னர் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்காக ஜனாதிபதியினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நுகர்விற்கு தேவையான அரிசி இந்தக் குழுவால் தீர்மானிக்கப்பட்டு, அதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு தீர்மானிக்கப்படும். இந்தக் குழுவில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஆர். சமரதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். கடந்த பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைகளின் போது, நாட்டில் குறைந்தளவிலான அரிசியே அறுவடை செய்யப்பட்டது. இதனால், கடந்த மாதங்களில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image