Home » உலகளாவிய இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்

உலகளாவிய இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்

Source
Share Button

.

உலகளாவிய இந்துக்கள் இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது தீபங்களின் ஆவளி என்று அர்த்தப்படும். தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடப்படும் திருநாள் என்று பொருள்.

இந்து இதிகாசங்களின்படி, மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ண பெருமான் வதம் செய்து அழித்தொழித்த நாளாக தீபாவளித் திருநாள் அமைகிறது. மதக் கோட்பாடுகளின் பிரகாரம், அறியாமை எனும் மன இருளை நீக்கி, அறிவெனும் ஒளியேற்றும் நாளாக தீபாவளித் திருநாள் நோக்கப்படுகிறது.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். சாவல்களில் இருந்து நாட்டை முன்னொக்கிக் கொண்டு செல்வதற்கு இன்றைய தினத்தில் நாம் சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி திருநாள் போதிக்கும் அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் என்பன தற்காலத்திற்கு மிகவும் பொருத்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமயம், கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கின்றார்;.

தீபாவளி தினத்தின் தார்ப்பரியங்களை உணர்ந்து சகலரும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது வாழ்த்தில் கூறியிருக்கின்றார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image