உலகளாவிய ரீதியில் சுமார் 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கிச் செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

உலகளாவிய ரீதியில் சுமார் 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இதனால், உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகளாவிய அவசரநிலையை சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
82 நாடுகளில் உள்ள மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பிஸ்லீ தெரிவித்துள்ளார். 45 நாடுகளில் சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் மோதல்கள் மற்றும் வன்முறைகளின் நேரடி மற்றும் மறைமுக தாக்கத்தின் விளைவாக மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
