உலக ஆயூர்வேத மாநாட்டின் மூலம் இலங்கையின் ஆயுர்வேதத் துறைக்குப் பல பிரதிபலன்கள்

இந்தியாவில் நடைபெற்ற ஒன்பதாவது உலக ஆயூர்வேத மாநாட்டின் மூலம் இலங்கை ஆயுர்வேதத் துறைக்குப் பல பிரதிபலன்கள் கிடைத்துள்ளன. இந்த மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் கோவாவில் கடந்த எட்டாம் திகதியில் இருந்து 11ஆம் திகதி வரை இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு இணைவாக இலங்கையின் சுதேச மருத்துவத் துறையினை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களை அதிகரிப்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இந்திய பல்கலைக்கழகங்களுடன் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
