உலக ஊடக சுதந்திர தினம் இன்றாகும். 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக ஊடக சுதந்திர தினம் பற்றிய யோசனையை முதலில் முன்மொழிந்தது. இதற்கு அமைய 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மே மாதம் 3ஆம் திகதியை உலக ஊடக சுதந்திர தினமாக அறிவித்திருந்தது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தின் 19 ஆவது உறுப்புரைக்கு அமைய தகவல்களை அறிந்துகொள்வதற்கும், தகவல்களை வெளியிடுவதற்கும் மனிதனுக்குக் காணப்படும் உரிமையை மேலும் விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும். ஊடக சுதந்திரம் இன்றி ஜனநாயக சுதந்திரமோ ஏனைய சுதந்திரங்களோ இல்லையென்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் அறிவித்துள்ளார். உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக நாடொன்றின் நான்காவது தூணாகவும் ஊடகம் கருதப்படுகின்றது. இலங்கையி;ல் 51ற்கு அதிகமான வானொலி நிலையங்களும் 20ற்கு அதிகமான தொலைகாட்சி அலைவரிசைகளும் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.