பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டிருக்கும் ஒரு தொகுதி காணியில் எதிர்வரும் சிறுபோகத்தில் இருந்து விவசாய செய்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்ககப்பட்டிருக்கிறது. நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டிருப்பதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எல்.அபயரத்ன தெரிவித்திருக்கிறார். மேல் மாகாணத்திலேயே அதிகளவான காணிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளாது கைவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.