உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் அறிவிப்பு இம்மாத இறுதிப்பகுதியில்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுக் கோரும் அறிவிப்பு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் பிரகடனப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் தேசிய வானொலிக்குத் தெரிவித்தார்.
