எதிர்வரும் சில தினங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, உடனடி பிரசார வேலைத்திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற தெரிவித்துள்ளார். வேட்பாளர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைககள் நிறைவடைந்துள்ளன. நாடு நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ள போதிலும், கிராமங்களின் அபிவிருத்தியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்தது. கட்சி தொடர்பில், பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். விவசாய மக்களுக்கு ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்துள்ளதாகவும் வக்கும்புற மேலும் தெரிவித்தார்.