உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில், சட்டத்திற்கு உட்பட்டு மாத்திரமே செயற்பட முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர்இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று திறைசேரி செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது வருந்தத்தக்கது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்;டார்.
கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் உயர் கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் வலியுறுத்தினார்.
உயர்கல்வி வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுவதோடு பல்கலைக்கழக கல்வி அதிகமானோருக்கு வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி வாய்ப்புகளும் அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய பாடுபடுவதாக குறிப்பிட்டார்.
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.