2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட விசைப்படகுகளில் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த சமயம் சிறை பிடித்த படகுகளின் உரிமையாளர்கள் இன்று யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.
மீனவர்களை விடுவித்து விசைப்படகுகள் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில் படகின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் ஊற்காவற்றுறை நீதிமன்றத்தில் நாளை 27.01.2023 ம் நேரில் ஆஜர் ஆவதற்காக இன்று வருகை தருகின்றனர்.
இதற்காக பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர்
வி.பி.சேசு ராஜா தலைமையில் படகின் எரிமையாளர்களான
மணிகண்ட பிரபு, தங்கச்சிமடம்
படகு எண்.IND TN 10 MM 382, வினால்டன்,
தங்கச்சிமடம்,
படகு எண்.IND TN 10 MM 753, ஜான் பீட்டர், தங்கச்சிமடம்,
படகு எண்.IND TN 10 MM 2576, சச்சின் டெண்டுல்கர்,
தங்கச்சிமடம்,
படகு எண்.IND TN 10 MM 2576, சகாயராபின்,
இராமேஸ்வரம்,
படகு எண்.IND TN 10 MM 201, சந்தியா லியோன்,
தங்கச்சி மடம்,
படகு எண்.IND TN 10 MM 1003, மைக்கேல் இருதயம்
தங்கச்சிமடம்
படகு எண்.IND TN 10 MM 365
ஆகிய எட்டு மீனவர்களுடன் கோட்டைபட்டின இரு மீனவர்களுமாக மொத்தம் 10 மீனவர்கள் இன்று காலை 10.50 மணிக்கு விமானம் மூலமாக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைகின்றனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதோடு தமது படகிற்கான சட்ட நடவடிக்கையினை தொடர்வதற்காக வருகை தருகின்றனர்.
TL