Home » எக்ஸ்பிரஸ்பேள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
எக்ஸ்பிரஸ்பேள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
ஏற்றமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை உட்பட 12 கட்டளைகள் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எக்ஸ்பிரஸ்பேள், நியுடைமன் கப்பல்களின் மூலம் இலங்கையின் கடற்பரப்பிற்கும், பொருளாதார வலயத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த பாதிப்புகளின் தாக்கம் இன்னும் சில தசாப்பதங்களுக்கு காணப்படும் என்று விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயதாஷ ராயபக்ஷ தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான நியுடைமன் கப்பல் தொடர்பில் தரப்பொன்று ஐந்து மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்படும்; குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, எக்ஸ்பிரஸ்பேள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பிற்கு நஷ்டஈடு கோரி சிங்கப்பூர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று முதற்தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எக்ஸபிரஸ்பேள் கப்பல் விபத்து தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை இரண்டு தினங்கள் நடத்துவதற்கு இன்று நடைபெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பான செயற்குழுவின் போது தீர்மானிக்கப்பட்டது. இதன்படி விவாதம் நாளையும், நாளை மறுதினமும் காலை 9.30இலிருந்து மாலை 6 மணிவரை நடைபெறும்.