எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கடந்த வருடம் புதிதாக இனங்காணப்பட்ட எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 479 எச்ஐவி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இளைஞர்களிடையே எச்ஐவி பாதிப்பு அதிகரித்துள்ளது. போதைப் பொருள்களை பயன்படுத்தி, பாதுகாப்பற்ற முறையில் பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துவதனால் எயிட்ஸ் நோய் பரவல் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலைகளில் பாலியல் கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.