எட்டு மாவட்டங்களுக்கு டெங்கு தொற்று அபாயம்

நாட்டின் எட்டு மாவட்டங்களில் அதிகளவிலான டெங்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 27 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டாயிரத்து 417 பேர் இந்த மாதம் 8ஆம் திகதி வரை பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எதிர்வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால், தமது சுற்றுப்புறச் சூழலை சுத்தப்படுத்தி, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.
