எதிர்கால அரசியல் தீர்மானங்கள் என்ன? தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆராய்வு
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உயர்மட்ட குழுவினர் நேற்றைய தினம் மாலை கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடி ஆராயப்பட்டது என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
இவ் ஆராய்வு குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
பாராளுமன்றத்தை பிரயோகப்படுத்தும் கட்சிகள் வரிசையில் ஒரு ஆசனத்தைக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் இடம் பெறுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் ஒரு சில தினங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் அவற்றின் பாராளுமன்ற
உறுப்பினர்களும் கூடி எடுக்கப் போகின்ற தீர்மானமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போவது நிச்சயமாகும்.
இன்நிலையில் நாட்டின் அதிகார மையங்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளின் தேர்வுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள், அவற்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது எப்படியான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்? எப்படியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும்? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது
இவ் விஷேட கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தலைவர் பணி குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கலந்து கொண்டனர்
நாட்டின் எதிர்காலம் தொடர்பாக ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அத்தகைய அரசியல் அதிகாரத்தில் கிழக்கு மாகாண தமிழர்களின் வகிபாவத்தை உறுதி செய்யும் இலக்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு கட்சியின் நிலைப்பாடுகள் அமைய வேண்டும் என்று தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
AR