எதிர்வரும் இரண்டு மாதங்களில் அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பத்தாயிரம் இந்திய சுற்றுலா பயணிகளை அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். இதற்காக பெங்களுர் மற்றும் இந்நாட்டு கலைஞர்களுக்கு இடையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு குழு இன்றிரவ நாட்டை வந்தடையவுள்ளது.