எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எமது நிலையத்திற்கு கருத்துத் தெரிவித்த அவர், ஆர்ப்பாட்டங்களின் போது, நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் முயற்சித்ததாக தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் அதன் மூலம் பயன்களை பெற முயன்றன. அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழ்நிலையை அரசாங்கம் தற்போது உருவாக்கியுள்ளது. அரசியல்வாதிகள் தேர்தலை எதிர்பார்த்தாலும், மக்கள் அமைதியான நாட்டையே விரும்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
