எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து தொலைபேசி சேவை கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் திருத்தப்படும்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கையில் அனைத்து தொலைபேசி வலையமைப்பு சேவைக் கட்டணங்கள் மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன. இதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கையடக்கத் தொலைபேசி, நிலையான தொலைபேசிகள் மற்றும் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு சேவைகளின் கட்டணங்கள் 20 சதவீதத்தாலும், தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் 25 சதவீதத்தாலும் அதிகரிக்கப்படும் என தகவல் தொடர்பு நிறுவனம் கூட்டாக அறிவித்துள்ளது. இது எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமான வரி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
