எதிர்வரும் பெரும்போகத்தின் போது, நெல் அறுவடைக்கு தேவையான யூரியா விநியோகம் ஆரம்பமானது

எதிர்வரும் பெரும்போகத்தின் போது, நெல் அறுவடைக்கு தேவையான யூரியா விநியோகம் ஆரம்பமானது. அதன் முதலாவது தொகையை யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 200 மெற்றிக் தொன் யூரியா உரத்தை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.
இந்திய அரசாங்கத்தினால், நாட்டுக்கு வழங்கப்படும் 65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தின், எஞ்சிய 21 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் இந்த வாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
