எதிர்வரும் போகத்தின் நெல் கொள்வனவுக்கு, நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகிறது

அடுத்த போகத்திற்கு நெல்லை கொள்வனவு செய்ய, நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராக உள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இனி அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என சபையின் பிரதித் தலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நெல் அறுவடை ஆரம்பமாகும். தற்போது சபையிடம் சுமார் 14 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளது.
அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ஆறாயிரத்து ஐநூறு மில்லியன் ரூபாவில், நெற் கொள்வனவுச் சபை ஏற்கனவே ஆறாயிரம் மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
