Home » எதிர்வரும் போகத்தில் சேதனப் பசளை மற்றும் இரசாயனப் பசளையை பயன்படுத்தி செய்கையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு சந்தர்ப்பம்

எதிர்வரும் போகத்தில் சேதனப் பசளை மற்றும் இரசாயனப் பசளையை பயன்படுத்தி செய்கையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு சந்தர்ப்பம்

Source
Share Button

உர விநியோக வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முறையாகவும், வினைத்திறனுடனும் முன்னெடுக்கப்படும் என கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினையும் இன்றி தொடர வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில், விவசாயிகள் சேதனப் பசளைகளையும், இரசாயன உரங்களையும் தமது பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்த முடியும். நெற் செய்கை, தேயிலை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு உரம் வழங்கப்படுகிறது.

கடந்த சிறுபோகத்தின் போது, விவசாயிகள் சேதனப் பசளையை பயன்படுத்த ஆரம்பித்ததால், விவசாயிகளின் அறுவடை குறைந்தமை கண்டறியப்பட்டது. இருப்பினும், சேதன பசளை மூலம் சிறந்த அறுவடையை பெற்றுக் கொண்ட விவசாயிகள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டிற்குத் தேவையான உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு தீர்மானிக்கின்றது. அரசாங்கத்தின் கொள்கையின்படி, எதிர்காலத்திலும் சேதனப் பசளை உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image