2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதமானவற்றை நிலைபேறான எரிசக்தி மூலமாக பெற்றுக்கொள்ள திட்டம்

2030ஆம் ஆண்டளவில் ஒன்பதாயிரம் மெகாவொட் நிலைபேறான எரிசக்தி மின் உற்பத்தியை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிலைபேறான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபால தெரிவித்துள்ளார். இதன்போது மொத்த மின் உற்பத்த்pயில் 70 சதவீதம் நிலைபேறான எரிசக்தியில் தங்கியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
