எந்தவித அரசியல் நிபந்தனைகளும் இன்றி இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது

இலங்கைக்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளும் இன்றி உதவிகளை வழங்கி வருவதாக சீனா அறிவித்துள்ளது. அரசியல் நோக்கங்களைத் தாண்டியே இலங்கையின் முதலீடு, நிதி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயார் என்று சீன வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இலங்கையின் நிதி நிறுவனங்களுக்குத் தேவையான நிதி உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன. சமூகப் பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான உதவிகளும் கிடைக்கும். இலங்கை நிதி உதவிகளை கோரிய சந்தர்ப்பத்தில் சீனா கண்ணியமான முறையில் வரலாற்று நெடுங்கிலும் நடந்துகொண்டதாக சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
