Home » எரிபொருளுக்காக செலுத்த வேண்டிய பணத்தை ஒரு திட்டத்துடன் செலுத்த ஏற்பாடு

எரிபொருளுக்காக செலுத்த வேண்டிய பணத்தை ஒரு திட்டத்துடன் செலுத்த ஏற்பாடு

Source
Share Button

எரிபொருள் விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டியுள்ள பணத்தை ஏதாவது ஒரு திட்டத்துடன் செலுத்த மத்திய வங்கியின் ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார். அதுவரை தற்போதுள்ள பணத்தைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நீண்டகாலமாக நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்த பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக மத்திய வங்கி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் பணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட கடன் பத்திரங்களை திறக்கும் முறைக்கு அமைய எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியுமானால் குறிப்பிட்ட சலுகை காலத்திற்குள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தாய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அங்கு தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் சில மாதங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை சமாளிப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image