எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கத் தீர்மானம்
வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கோட்டா அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இதற்குத் தேவையான எரிபொருள் வகைகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கையிருப்பில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு அமைய முச்சக்கர வண்டிகளுக்கான பத்து லீற்றர் எரிபொருள் கோட்டா 15 லீற்றர்கள் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 7 லீற்றர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கார்களுக்கான எரிபொருள் கோட்டா 30 லீற்றர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.