Home » எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவையில் தடங்கல்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவையில் தடங்கல்

Source
Share Button

தனியார் பஸ் தொழில் தொடர்பில், உணர்வுடன் செயற்படுமாறு இலங்கை தனியார் பஸ் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் பஸ் சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனியார் பஸ் சேவைகள் தற்போது 25 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எந்த வகையிலாவது, அரசாங்கம் நிவாரணம் வழங்கி தனியார் பஸ்களின் செயற்பாட்டை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமைபோன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். எமது நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன், போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதிய பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image