எரிபொருள் விநியோக நடவடிக்கை எந்தவிதத் தடையும் இன்றி இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள 20 ஊழியர்களை தவிர, ஏனைய சகல ஊழியர்களும் சேவைக்கு திரும்பியுள்ளார்கள். கூட்டுத்தாபனத்தின் அன்றாட நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறுகின்றன. அண்மையில் இடம்பெற்ற தொழிற்சங்க நடவடிக்கை பற்றி விசாரணை நடத்தி, அது தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.