எரிவாயு விலைத் திருத்தம் இன்று முற்பகல் அறிவிக்கப்படும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது

கேஸ் விலைத் திருத்தம் இன்று முற்பகல் அறிவிக்கப்படும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்திருக்கின்றது. கேஸ் தட்டுப்பாடு ஏற்பாடுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்பிரல் மாதம் வரை போதியளவிலான கேஸ் கையிருப்பில் காணப்படுகின்றது. உலக வங்கியின் கடன் உதவி முடிவடைந்தாலும் கேசைக் கொள்வனவு செய்வதற்குப் போதுமான டொலரை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு லிற்றோ நிறுவனத்திற்குக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
