எல்லை நிர்ணய குழுவிற்கு கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பித்தல் இம்மாதம் 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த குழு, பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள இடைக்கால அறிக்கை நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக, இடைக்கால அறிக்கை பகிரங்கப்படுத்தல் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தல் போன்றவை இடம்பெறுகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்து, சிக்கல் இருப்பின், எவராலும் தமது யோசனைகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.