எல்ல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை
.
எல்ல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றுலா, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து நான்கு மாத காலப்பகுதியில் குறித்த அபிவிருத்திக்கான திட்டத்தை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார். எல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்தார். குறித்த பகுதியை சேர்ந்த வர்த்தக சங்க உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். சுற்றுலா பயணிகளை கவரும் எல்ல சுற்றுலா வலயத்தை, முறையான திட்டங்களுடன் அபிவிருத்தி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.