Home » ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அறிவித்துள்ளார்

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அறிவித்துள்ளார்

Source
Share Button

போட்டித் தன்மையுடன் கூடிய பொருளாதார முறைமைக்காக ஏற்றுமதிக்கு முதலிடம் வழங்கும் யதார்த்தமான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இலவசக் கல்வி அமுலில் இருந்தாலும், நாடு இன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக அமைச்சர் கவலை வெளியிட்டார். முறையற்ற விதத்தில் பணம் அச்சிடப்பட்டமையின் விளைவுகளை நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, அரசியல் ரீதியான மோசடிக்காரர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பாரிய தடை ஏற்படுவதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். வியாபார ரீதியான மோசடிக்காரர்கள் வழங்கிய ஆலோசனைகளே கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவக்கூடிய வகையிலான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதன் மூலம் பொருளாதார சவால்களை வெற்றி கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தாம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் விலகிச் செல்லவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். தற்சமயம் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் புரட்சிகளை போன்ற சம்பவங்களும் இடம்பெற்றன. இதனால், கொள்கை ரீதியான விடயங்கள் பற்றி இணக்கப்பாட்டுடன் செயற்படுவது அவசியமாகும். எதிர்க்கட்சியின் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image