Home » ஏற்றுமதியை இலக்காக கொண்ட போட்டித்தன்மையான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

ஏற்றுமதியை இலக்காக கொண்ட போட்டித்தன்மையான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

Source
Share Button

ஏற்றுமதியை இலக்காக கொண்ட போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முப்படையினரின் பாதுகாப்பு திறனையும் பொறிமுறைகளையும் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சிறிமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி; இதனைத் கூறினார். கடற்பயணங்களை சுதந்திரமாக முன்னெடுக்க இயலாதுவிடின,; ஏற்றுமதி பொருளாதார இலக்கினை நிறைவேற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு காட்டும் ஆர்வத்தினை விட ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கு ஏராளமானோர் விரும்புவதாக ஜனாதிபதி கூறினார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தின் மற்றுமொரு பீடத்தை குருணாகலில் ஆரம்பிப்பதற்கு தான் நிதியமைச்சுக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image