ஏவுகணை பாதுகாப்புக் கட்டமைப்புக்களை உக்ரேனுக்கு வழங்க நேட்டோ அமைப்பு தீர்மானம்

ஏவுகணைகளிலிருந்து பாதுகாப்பதற்கான இராணுவக் கட்டமைப்பை உக்ரேனுக்கு வழங்க நேட்டோ அமைப்பு தீர்மானித்துள்ளது. ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரேனுக்குச் சொந்தமான பிரதேசங்களில் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தமை இதற்கான காரணமாகும். ஐக்கிய இராஜ்யம், கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் ஏவுகணைப் பாதுகாப்புக் கட்டமைப்புக்களையும், ராடார்களையும் உக்ரேனுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளன. ஜேர்மன் அரசாங்கமும் உயர் தொழில்நுட்பத்திலான இராணுவ தளவாடங்களை உக்ரேனுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
