ஐக்கிய இராஜ்யத்தின் தாதியர்கள் மிகப்பெரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறார்கள்

ஐக்கிய இராஜ்யத்தின் தாதியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள். ஐக்கிய இராஜ்யத்தின் சுகாதாரத்துறையில் தாதியர்கள் மேற்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய வேலைநிறுத்தம் இதுவாகும். இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய இடங்களில் உள்ள தாதியர்கள் சம்பள அதிகரிப்பை கோரி, இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கிறார்கள். தாதியர்கள் முன்வைக்கும் 19 சதவீத சம்பள அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
