ஐக்கிய தேசியக் கட்சி 76ஆவது நிறைவாண்டை கொண்டாடுகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது நிறைவாண்டு நிகழ்வு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கட்டியெழுப்பிய கட்சியாகும் என்று நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலை நோக்குடைய தலைவர் என்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வல்லமை அவருக்கு இருப்பதாகவும் பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டார். சகலரும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த அவற்றை வெல்லக்கூடிய தலைவர்களை ஐக்கியதேசியக்கட்சி உருவாக்கியிருப்பதாக கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐகக்pய தெசியக் கட்சியின் தலைவரின் தொலை நோக்கு பாhவையை கட்சிப் பேதமின்றி அணைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
