Home » ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை தொடர்பான 27ஆவது மாநாடு இன்று எகிப்தில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை தொடர்பான 27ஆவது மாநாடு இன்று எகிப்தில் ஆரம்பம்

Source
Share Button

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை தொடர்பான 27ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை தூதுக்குழுவினர் இன்று எகிப்திற்கு பயணமாகின்றனர். இந்தக் குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைவராக செயற்படுகிறார். சுற்றாடல்துறை அமைச்சர் நஸிர் அஹமட், சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மற்றும் தனியார் துறையை சேர்ந்த பிரதிநிதிகள் தூதுக்குழுவில் இணைந்துள்ளனர். 27ஆவது மாநாடு இன்று ஷாம் எல் ஷேக்கில் (Sharm El Shikh) ஆரம்பமாகிறது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இது நடைபெறும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுற்றாடல் அமைச்சர் நஸிர் அஹமட் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.. சுற்றாடல்துறை துறை அமைச்சர் 9 நாட்களுக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றாடல் அமைச்சர்கள் சர்வதேச சுற்றாடல் அமைப்புக்களின் உயர் அதிகாரிகளை இலங்கைக் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image