ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகிறார்

கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என்பதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சு பதவியை பெறும் நோக்கில் கட்சியில் இருந்து விலகியதாக சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
