ஐசிசி மகளிர் ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின், மேலும் இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. அதன்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை 6.30க்கு தென்னாபிரிக்காவின் பால் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றிரவு 10.30க்கு பால்மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மகளிர் அணி இதுவரை கலந்து கொண்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.