Home » ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கின்றது

ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கின்றது

Source
Share Button

சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆயிரத்து 296 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 31 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கப்படுவதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண் சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் 3 மணி நீடிக்கப்பட்டிருக்கிறது. காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே மண் சரிவு எச்சரிக்கை நிலவவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கனமழை காரணமாக நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் நீர் மட்டம் அதிகரித்திருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. களுகங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர் மட்டம் எச்சரிக்கைக்குரிய நிலையை அடைந்துள்ளன. நீர் நிலைகளை அண்;மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை அண்;மித்த நீர்த்தேக்கங்களின்; நீர்மட்டம் 90 வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் திணைக்ளம் குறிப்பிட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image