ஐயாயிரம் மெட்ரிக் தொன் அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்

இந்தியன் கடனுதவியின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது.
நாட்டில் எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாமென அஞ்சப்படுகிறது. அதனைத் தவிர்ப்பதற்காகவும் அரிசியின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காகவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
