ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகும். அதன்போது ஜனாதிபதி, கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை நேற்று நள்ளிரவுடன் முடிவுறுத்துவது பற்றிய வர்த்தமானியை ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிடுள்ளார்.