ஒருவகை வெள்ளை ஈ தாக்கத்தால் பல மாவட்டங்களில் தெங்கு செய்கை பாதிப்பு

ஒருவகை வெள்ளை ஈ தாக்கத்தினால், பல மாவட்டங்களில் தென்னைச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் தென்னைச் செய்கையிலும் இந்த ஈ அதிகளவில் பரவி தென்னை செய்கைகளை பாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈயை ஒழிப்பதற்காக மூன்று வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தேவையான ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் தெங்கு உற்பத்தி சபையின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
