ஒரே தடவையில் ஆயிரம் கிலோ போதைப்பொருளை அழிக்கக்கூடிய உபகரணத்தை பொருத்தமான இடத்தில் பொருத்துவது பற்றி நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஹெரோயின் உட்பட 3 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் உள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரிய அரசாங்கம் வழங்கிய இரண்டு புதிய ஆய்வுகூடங்களை நிறுவிய பின்னர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் வினைத்திறனாக முன்னெடுப்பதாகவும் என்றும் அமைச்சர் கூறினார்.