ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தின் நோக்கம் ஊடக அடக்குமுறை அல்ல என்று அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய சட்டமூலத்தின் ஊடாக முறையான ஊடக வலையமைப்பை நாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படும். சமூக ஊடகங்கள் தொடர்பில் தனியான ஆய்வுகளை மேற்கொள்வதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊடக ஒளிபரப்பு கொள்கைத்திடட்ம் மற்றும் அது குறித்த சட்ட கட்டமைப்ப எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார்.