ஓமானில் உள்ள சுரக்ஷா என்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பணிப்பெண்கள் பற்றித் தொடர்ந்தும் விசாரணை

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் இயங்கும் சுரக்ஷா என்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் பெண்கள் பற்றிய விசாரணைகளின்போது பல்வேறு விடயங்கள் தெரியவ்நதுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறித்துள்ளது. ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் பற்றிய தகவல்களும் விசாரணைகளின் போது அம்பலாமாகியுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு எஞ்சியுள்ள விசாரணைப் பணிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராகவும் ஆட்கடத்தலுடன் தொடர்பட்டோருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவின் முக்கியத்தர்களும் ஓமான் சென்றுள்ளார்கள். தூதரகத்தின் கீழ் இயங்கும சுரக்ஷா என்ற இல்லத்தில் வசிக்கும் 84 பணிப்பெண்களிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
