Home » ஓர் ஆண்டு  நிறைவைக் காணும் வவுனியா பல்கலைக்கழகம்

ஓர் ஆண்டு  நிறைவைக் காணும் வவுனியா பல்கலைக்கழகம்

Source

ந.லோகதயாளன்.

வன்னிப்பிரதேசத்தின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றி வருகின்ற வவுனியா பல்கலைக்கழகம் தனது முதலாம் ஆண்டை நாளை நிறைவு செய்கின்றது. இது, முதலில் வடமாகாண இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியாக 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, ஆறு வருடங்களில் 1997 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகமாக பிரயோக விஞ்ஞான பீடம், வியாபார கற்கைகள் பீடம் என இரண்டு பீடங்களுடன் தரமுயர்த்தப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வவுனியா பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது.

பிரயோக விஞ்ஞான பீடம், வியாபார கற்கைகள் பீடம், தொழில்நுட்பப் பீடம் என மூன்று பீடங்களுடன் பல்கலைக்கழகமாகத் தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கியுள்ள இந்த உயர் கல்வி நிறுவனத்தில் நாட்டின் அனைத்து கலாசார, மதங்கள் மற்றும் இனங்களையும் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். முன்னூறுக்கும் மேற்பட்ட கல்விசார், கல்விசாராத ஊழியர்கள் இங்கு பணியாற்றுகின்றார்கள்.

எனினும் இந்தப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவான அளவிலேயே காணப்படுகின்றன. இங்கு அவசியமான கட்டிட வசதிகளை ஏற்படுத்துவதற்குரிய வேண்டுகைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான முதலீட்டு நிதியொதுக்கீடுகள் அரசிடமிருந்து கிடைக்கவில்லை. பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, இங்கு அவசியமான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் நாட்டைத் தாக்கிய கொவிட் 19 நோய்ப் பேரிடர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்துறைக்கு அவசியமான முதலீட்டு நிதியொதுக்கீட்டை அரசு செய்யவில்லை. இது பல்கலைக்கழகத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயினும் பற்றாக்குறைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கடந்த ஒரு வருட காலத்தில் வவுனியா பல்கலைக்கழகம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றது. அவற்றில் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக (ர்யசஅழலெ ஊநவெசந) நல்லிணக்க நல்லுறவு நிலையம் ஒன்றை இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கின்றது.

பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனை துணைவேந்தராகக் கொண்டு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டஒரு மாத காலத்திலேயே பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இந்த நல்லிணக்க நிலையம் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பது கவனத்திற்கு உரியது. இங்கு பயிலுகின்ற பல்வேறு கலை காலாசாரங்கள் மதங்களைப் பின்பற்றுகின்ற அனைத்து இன மாணவர்கள் மற்றும் இங்கு பணியாற்றுகின்ற ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும்; நல்லுறவை வளர்ப்பதற்காக இந்த நிலையம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

கல்வி பயிலும்போதே இங்குள்ள மாணவர்கள் நல்லிணக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், அவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிச் சென்ற பின்னர் நாட்டில் பல்வேறு இன மத, கலை கலாசாரங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் உருவாக்குவதே இந்த நல்லிணக்க நிலையத்தின் நோக்கம் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் கூறுகின்றார்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் வவுனியா பல்கலைக்கழகத்திலேயே முதன் முதலாக இந்த நல்லிணக்க நிலையம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய நல்லிணக்க நிலையங்களை உருவாக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையத்தின் ஊடாகப் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் அரசியலில் பெண்கள் என்றதொரு கல்வி நெறியை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக இந்த நல்லுறவு நிலையம் குறித்து விளக்கமளித்த பேராசிரியர் மங்களேஸ்வரன் கூறினார். அதேவேளை அடுத்த வருட ஆரம்பத்தில் நல்லிணக்க நிலையத்தின் ஊடாக அனைத்துலக ரீதியிலான நல்லிணக்க மாநாடு ஒன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இந்த மாநாட்டில் உள்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமன்றி உலக நாடுகளைச் சேர்ந்த நல்லிணக்கத்துறை சார்ந்த ஆய்வாளர்களும் கலந்து கொண்டு நல்லிணக்கம் தொடர்பிலான தமது அனுபவங்கள் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். இனங்களுக்கிடையிலான நல்லுறவு சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு என்ற தொதனிப்பொருளில் உலகளாவிய நல்லிணக்கம் பற்றிய அனுபவப் படிப்பினைகளின் மூலம் எமது நாட்டில் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் பேராசிரியர் மங்களேஸ்வரன் தெரிவித்தார்.  

இலங்கையைப் பொறுத்தமட்டில் இரண்டு மொழிகள் மூவின மக்களே வாழ்கின்றார்கள். ஆனால் இந்தியாவைப் போன்ற ஏனைய உலக நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள். இவ்வாறு பல மொழிகளைப் பேசுகின்ற பல மதங்களைச் சேர்ந்த மக்கள் மத்த்pயில் அந்த நாடுகளில் எவ்வாறு நல்லிணக்கம் நல்லுறவு பேணப்படுகின்றது என்பதையும் அதுபற்றிய அனுபவங்களின் ஊடாக இங்குள்ள மக்களுக்கும் கல்விசார் சமூகத்தினருக்கும், துறைசார்ந்தவர்கள் மற்றும் அரசியலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பல்வேறு விடயங்களையும் படிப்பினைகளையும் இந்த மாநாட்டின் ஊடாகக் கிடைக்கச் செய்வதும் இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் இந்த நல்லுறவு நிலையம் ஒரு தொலைநோக்குடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
நல்லிணக்கச் செயற்பாட்டுக்கான நிலையம் ஒருபுறமிருக்க வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி சிறப்பான கல்விச் செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்கத்துடன் வவுனியா பல்கலைக்கழகம் ஒரு சர்வதேச அலகு என்ற பிரிவை ஆரம்பித்திருக்கின்றது.

உலக நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து அதன் ஊடாக கலவிசார் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சர்வதேச அலகின் ஊடாக இப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும், கல்விசார் ஊழியர்களுக்கும் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கல்விசார் ஊழியர்களுக்கும் இடையில் பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விநெறிகள் யாவும் ஆங்கில மொழிமூலமாகவே நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இந்த வெளிநாட்டு அலகின் ஊடாக வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமது சொந்தப் பணத்தில் இங்கு வந்து கல்வி கற்பதற்கான வாயப்புக்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து இங்கு வருகின்ற மாணவர்களின் மூலம் அந்நியச் செலவாணி கிடைப்பதற்கும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கும் வவுனியா பல்கலைக்கழகம் பங்களிப்புச் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பல்கைலக்கழத்திற்கான அனுமதியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக 5 வீதம் வெளிநாட்டு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகங்கள் பொதுவாக மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன் பட்டமளிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் வவுனியா பல்கலைக்கழகம் அதனின்று ஒரு படி முன்னோக்கிச் சென்று கடந்த ஒரு வருட காலத்தில் பல்கலைக்கழகத்திற்கும் வியாபார சமூகத்துக்கும் இடையிலான ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அத்துடன் சமூகச் செயற்பாடுகளில் அறிவுசார் நிலையில் ஈடுபடவும் நிறுவன ரீதியில் சமூகத்திற்கான பணிகள் சேவைகளை முன்னேற்றுவதற்கும் வசதியாக தனியார் நிறுவனங்கள் பலவற்றுடன் வவுனியா பல்கலைக்கழகம் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது.

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் மேற்கொள்கின்ற ஆய்வுகள் மற்றும் ஆய்வு ரீதியிலான கண்டுபிடிப்புக்கள் வியாபார சமூகத்திற்குச் சென்றடைவதற்கும் அவற்றின் ஊடாக அந்த சமூகத்தினர் விழிப்படைவதற்கும் பயனடைவதற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்வதற்கும் இதன் மூலம் வழி வகுக்கப்பட்டிருக்கின்றது.

விசேட தேவையுடையவர்களும் உயர் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு உதவும் வகையிலும், (ளுரிpழசவ ஊநசெந கழச Pநசளழளெ றiவா னுளையடிடைவைநைள) விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கான உதவி நிலையம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும், உதவிகளின்றி ஒதுங்கியும் வாழ்கின்ற விசேட தேவைக்கு உட்பட்டவர்களும் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்து கொள்வதை உறுதிப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே வவுனியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்கின்ற விசேட தேவைக்கு உட்பட்ட மாணவர்கள், அங்கு பணியாற்றுகின்ற விசேட தேவைக்கு உட்பட்டவர்கள் தொடர்பில் பல்கலைக்கழக சமூகத்திற்கும் வெளிச்சமூகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் ஏனையவர்களுடன் சமநிலையில் உயர்கல்வியிலும் தொழில் வாய்ப்புக்களிலும் உள்வாங்குவதை உறுதிப்படுத்துவதற்கு இந்த நிலையம் பேருதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேட தேவைக்கு உட்பட்டவர்கள் சமூகத்தின் பல்வேறு செயற்பாடுகளிலும் இயல்பாக உள்நுழையவும் அவர்களை இயல்பாக உள்வாங்குவதற்கும் வசதியாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக வடமாகாண அளவில் விளையாட்டுப் போட்டியொன்றை நடத்துவதற்கும் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விசேட தேவைக்குரியவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

வவுனியா மன்னார் வீதியில் பம்பைமடு பிரதேசத்தில், வவுனியா நகரில் இருந்து பத்து கிலோ மீற்றர் தொலைவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழக நிலச் சூழலைப் பாதுகாத்து, பசுமைச் சூழல் திட்டத்தின் கீழ் நேர்த்தியாக்கி, அழகுபடுத்தி இயற்கையுடன் வாழும்  நோக்கத்துடன் அதற்கென பிரிவொன்றை அமைத்து, அதற்கென குழுவொன்றும் உருவாக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

சோபால புளியங்குளம் மற்றும் வேலங்குளம் ஆகிய இரண்டு குளங்கள்  அமைந்துள்ள இயற்கைச் சூழலில் இந்தப் பிரதேசத்திற்கே உரிய 2500க்கும் மேற்பட்ட தாவரங்களைக் கொண்ட  195 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு இயற்கையான குளங்களில் ஒன்றாகிய சோபால புளியங்குளம் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகப் பிரிவுக்கும் குடியிருப்புக்கான விடுதிகள் அமைந்துள்ள பிரிவுக்கும் இடையில் அழகான சூழலில் அமைந்துள்ளது. வேலங்குளம் குளம் பல்கலைக்கழகக் காணியின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.
இந்த இரண்டு குளங்களையும் சீரமைத்து, நிலத்தடி நீரைப் பாதுகாத்து, மனதைக் கவர்ந்து மகிழ்வுறும் வகையில் இயற்கைத் தன்மை மாறாமல்  அழகுபடுத்தும் நோக்கில் இந்தப் பிரதேசத்திற்கே உரிய மேலும் பல்வேறு தாவரங்களை மர நடுகைத் திட்டத்தின் கீழ் பயிரிட்டுப் பாதுகாத்துப் பேணுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஊழியர்களும் மாணவர்களும் பல்வேறு விடயங்களில் சர்வதேச தர நிலையிலான வரையறைகளுக்கு உட்பட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் உயர்வான தரத்தில் கல்வியை வழங்குவதற்கும் வழிகாட்டி உதவும் வகையில் தர உறுதி நிலையம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.   

நாட்டில் உள்ள பல்வேறு விடயங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதில் நிலவுகின்ற குறைபாடுகளைப் போக்கி ஆய்வு முயற்சிகளை மேம்படுத்தும் வகையில் சர்வதேச நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் எமது புலம்பெயர் சமூகத்தின் துறைசார்ந்த வளநிலைத் திறனாளர்கள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும், இங்குள்ளவர்களும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்தக் கட்டமைப்பு பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதேச கலாசாரங்களை மேம்படுத்தவும் பிற கலாசாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் எதிர்கால சந்ததியினருக்கு அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்குமாக ஒரு கலாசார நிலையம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையத்தின் ஊடாக இப் பிரதேசத்தின் வரலாற்றை அடையாளப்படுத்திக் கூறுகின்ற பொருட்களையும், கலாசார அடையாளப் பொருட்களையும் சேமித்துப் பாதுகாப்பதற்காக கலாசார பொருட் காட்சி நிலையம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

புதிய கல்வி பீடங்களை உருவாக்கும் பணியில் உடனடியாக மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கென பல்கலைக்கழகத்தின் எதிர்ப்புறத்தில் 35 ஏக்கர் காணியொன்ளை ஒதுக்கித் தருவதற்கு அரசு இணக்கம் தெரிவித்திருக்கின்றது. மேலும், செயற்திட்ட முகாமைத்துவக் கல்விக்கென நிறுவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
முன்னர் இங்கு இடம்பெற்று வந்த ஆங்கிலக் கல்விக்கான டிப்ளோமா கல்வி நெறியை பல்கலைக்கழக மூதவையின் அனுமதி பெற்று ஆங்கில உயர் டிப்ளோமா கல்வி நெறியாக தரமுயர்த்தி மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஏனையோரும் ஆங்கிலக் கல்வியில் தமது அறிவையும் திறனையும் தரமுயர்த்தி வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்நோக்கப்படுகின்றது.  

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள வங்கியியலும் காப்புறுதியும் என்பதற்கான கற்கை நெறியில் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தாராத உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  

தொழில் முயற்சியாண்மை, ஊடகவியல் போன்ற துறைகளிலான கல்வி நெறிகளை ஆரம்பிப்பதற்கும் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை உயர் டிப்ளோமா கல்வி நெறியாகம் தiடுமுயர்த்தித் தொடர்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியன கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனித்தனியே தமது துறைசார்ந்;த நிலையில் சர்வதேச மாநாடுகளை நடத்தியிருக்கின்றன. தொடர்ந்து தொழில்நுட்பப் பீடம் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.  

பல்வேறு பிரிவினருடனும் நெருக்கமாக இணைந்து செயற்படுவது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகக் கல்வியில் சர்வதேச தரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஏனைய பல்கலைக்கழகங்களில் இருந்து வவுனியா பல்கலைக்கழகம் வேறுபட்டிருக்கின்றது.

தரமுள்ள நிலையான உயர்கல்வியை வழங்குவதுடன் சமூகத்தின் தேவைகள், பிரச்சினைகனை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை ஆய்வு ரீதியில் முன்வைப்பதை இலக்காகக் கொண்டுன்ள பல்கலைக்கழகக் கல்வியின் தூரநோக்குடன், வன்னிப் பிரதேசத்தினதும்,வடமாகாணத்தினதும் உயர் கல்வித் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி இப்பிரதேசத்தின் உயர் அடையாளமாக வவுனியா பல்கலைக்கழகத்தை உருவாக்குவதே தமது நேக்கம் என வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் இந்த ஒரு வருட நிறைவு காணும் தருணத்தில் தெரிவித்தார். 

TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image