கச்சதீவு உற்சவத்திலும் பல தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கச்சதீவு உற்சவம் இரு நாள்கள் இடம்பெற்றது. இதன்போது இலங்கை இந்தியா ஆகிய நாடுகளின் பல ஆயிரம் பக்தர்கள் பங்குகொண்டிருந்தனர்.
இவ்வாறு கலந்து கொண்ட பக்தர்களிடம் இருந்து பணம், நகை என்பன களவாடப்பட்டமை தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதோடு ஓர் நகை பறிப்பும் இடம்பெற்றதாக அறிவித்தல் விடப்பட்டது. இதில் ஓர் தாலிக்கொடி மட்டும் 11 பவுன் நிறைகொண்டது என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட நகை, பணம. என்பன மீட்கப்பட்டதான தகவல் ஏதும் கிடைக்கவில்லை